free website hit counter

தமிழரின் கதையில் தெலுங்கராக நடிக்க மறுத்த விஜய்சேதுபதி!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பாலிவுட் வரை தன்னுடைய நடிப்புக்கொடியைப் பறக்கவிட்டிருக்கிறார் விஜய்சேதுபதி. அடிப்படையில் விஜய்சேதுபதியின் தாய்மொழி தெலுங்கு. ஆனால், விஜய்சேதுபதிக்கு தெலுங்கு மொழியைப் பேசவோ எழுதவோ தெரியாது.

இருந்தாலும் ஒரு தமிழர் பற்றிய கதை தெலுங்கில் படமாகியிருக்கும் நிலையில் அதில் வில்லனாக நடிக்க விஜய்சேதுபதியை அழைத்தபோது அதில் நடிக்க மறுத்துவிட்டார். அந்தப் படம்தான் தற்போது பரபரப்பைக் கிளப்பியிருக்கும் புஷ்பா.

தெலுங்கில் சூப்பர் டூப்பர் வெற்றிபெற்ற ‘ரங்குஸ்தலம்’ வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா மந்தனா ஜோடியை வைத்து சுகுமார் இயக்கி முடித்திருக்கும் படம்தான் ‘புஷ்பா’. படம் ரெடியான விதத்தைப் பார்த்து வெளியீட்டுக்கு முன்னரே இரண்டாம் பாகம் எடுக்கவும் திட்டமிட்டு படப்பிடிப்பைத் தொடர்கிறார் சுகுமார். செம்மரக்கட்டை கடத்தல் மற்றும் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்ததாகக் கூறப்படும் புஷ்பராஜ் என்ற தமிழரின் கதை. புஷ்பராஜ் கதாபாத்திரத்தை இதில் கதாநாயகனாகக் காட்டியுள்ளனர்.

இந்தப் படத்தில்தான் விஜய்சேதுபதி நடிக்க மறுத்தார். ‘நான் இன்று ஒரு தமிழன்.. தமிழனே தமிழுக்கு எதிராக நடிப்பது சரியல்ல’ என்று கூறியே விஜய்சேதுபதி மறுத்துவிட்டார் என்று கூறுகிறார்கள். ஆனால், அதை வெளியே கூறாதீர்கள் என புஷ்பா இயக்குநர் கேட்டுகொண்டதால் ‘கால்ஷீட் கொடுக்க டேட் இல்லை’ என ஊடகங்களுக்கு சால்ஜாப்பு சொல்லியிருக்கிறார். இந்தப் படத்தின் டீசர் வெளியாகி பட்டையைக் கிளப்ப, கோடிகளைக் கொட்டிக் கொடுத்துத் தமிழ்நாட்டு விநியோக உரிமையைக் கைப்பற்றி பெரும்போட்டி போட்டு வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: