free website hit counter

நிம்மதிப் பெருமூச்சு விட்ட ஆர்யா!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கதாநாயகிகளுடன் ஜாலியாகப் பழகினாலும் வெள்ளந்தியான நடிகராக திறந்த புத்தகமாக இருப்பவர் நடிகர் ஆர்யா. அவரது நடிப்பில் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இலங்கையைச் சேர்ந்த விட்ஜா என்ற பெண், நடிகர் ஆர்யா தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னிடம் 70 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு, தன்னை ஏமாற்றி விட்டார் என்று சென்னை பெருநகர காவல் துறையில் புகார் தெரிவித்திருந்தார்.

ஜெர்மன் நாட்டில் குடியேறி அங்கே குடியுரிமை பெற்று அங்கு வசித்து வரும் விட்ஜா, ஆர்யா மீது பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலமும் அந்தப் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், “பணத்திற்கு கஷ்டப்படுவதாகக் கூறிய ஆர்யா, தன்னை விரும்புகிறேன் என்றும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்” என்றும் கூறியதாகத் தெரிவித்திருந்தார். பிரபல நடிகரான ஆர்யா மீது, பெண் ஒருவர் ஏமாற்றிவிட்டதாகப் புகார் அளித்தது தமிழ்த் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடிகர் ஆர்யாவும் அண்மையில் போலீசார் விசாரணைக்கு ஆஜராகி இருந்தார்.

இந்நிலையில் நடிகர் ஆர்யா போல் நடித்து இலங்கை பெண்ணிடம் பணம் பறித்த சென்னைச் சேர்ந்த இருவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த முகமது அர்மான்,உடந்தையாக இருந்ததாக அவருடைய மைத்துனர் ஹூசைனி பையாக் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், பெரும் மன உளைச்சளிலிருந்து தான் விடுபட்டுள்ளதாகவும் உண்மையான குற்றவாளிகளைப் பிடிக்க உதவிய பெருநகர சென்னை காவல் துறைக்கும் இணையப்பிரிவு போலீசாருக்கும் தாம் நன்றி தெரிவித்துகொள்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் ஆர்யா!

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: