free website hit counter

கார்த்தி ரசிகர்களின் ‘கைதி -2’ கொண்டாட்டம்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஒரு பக்கம் அண்ணன் சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் தமிழ்நாட்டின் சாதிக்கட்சி அரசியல் வாதிகளால் மலினமான விமர்சனத்துக்கு உள்ளாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதற்கிடையில் தம்பி கார்த்தி, இந்த விவகாரம் பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருந்தாலும் அண்ணன் சூர்யாவுக்கு முழு அளவில் சப்போர்ட் செய்து வருகிறார். தற்போது கார்த்தில் நடித்துவரும் ‘விருமன்’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், அவர் வந்தியத்தேவனாக நடித்திருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், அவர் 2019-ஆம் ஆண்டு நடித்த ‘கைதி’ திரைப்படம், ஜப்பான் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ‘கைதி டெல்லி’ என்ற பெயரில், ஜப்பான் நாட்டில் நவ.19-ம் தேதி வெளியாகவுள்ளது.

கடல் கடந்து புகழ் பெற்றிருக்கும் ‘கைதி’ திரைப்படத்தின் 2-ம் பாகம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு, எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதை சமூக வலைதளங்களில் காட்சியின் ரசிகர்கள் கேட்டு வந்தனர். இதையடுத்து அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கணகராஜ் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் “‘கைதி-2’ படத்துக்கான பெரும்பாலான காட்சிகளை முதல் பாகம் எடுக்கும்போதே படமாக்கிவிட்டதாகவும், 30 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார். இதைக் கேட்டு கார்த்தி ரசிகர்கள் ஆனந்தக் கூத்தாடி வருகின்றனர். தற்போது கமல் நடித்துவரும் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் படம் முடித்துவிட்டு வந்ததும் கார்த்தி விருமன் படங்களில் இருந்து விடுபட்டதும் ‘கைதி 2’ படத்துக்கான எஞ்சிய காட்சிகளை எடுக்க திட்டமிட்டு உள்ளனர்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: