free website hit counter

சினிமா பார்த்தால் மரண தண்டனை !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஒரு தேசத்தின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றாக இருப்பது சினிமா. ஆனால், உலக வரைபடத்திலிருந்து தன்னை துண்டித்துக்கொண்ட நாடு வடகொரியா. அங்கே நவீன யுகத்தின் ஹிட்லர் என்று கூறப்படும் ஜிம் ஜோங் உண், திரைப்படங்களைக் கண்டு மிரண்டுபோயுள்ளார்.

‘வெளிநாட்டு திரைப்படங்களை வடகொரிய மக்கள் பார்த்தால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்’ என்று அவரது அரசு அறிவித்துள்ளது. அண்மையில் தென்கொரியா திரைப்படங்கள் அடங்கிய வீடியோக்களை விற்பனை செய்த குற்றத்திற்காக ஒரு இளைஞருக்கு 500 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டடது..

வடகொரியாவில் அவ்வப்போது சீனாவின் எல்லை வழியே கடத்தி வரப்படும் சிடிக்கள் மூலமாக வெளிநாட்டு திரைப்படங்களை மக்கள் பார்த்து வந்தனர். அதன் தாக்கம் அதிகரித்து அரசுக்கு எதிராக கேள்வி எழுப்ப தொடங்குவார்கள் என்ற எண்ணம் கிம் ஜோங் உண் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டு படங்களை விற்பவர்கள், பரப்புபவர்கள், காண்பவர்களை கண்டறிந்து தண்டனை வழங்கும் சட்டத்தை கிம் தீவிரமாக நடைமுறைப்படுத்தி இருக்கிறார்.

மேலும் தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளை சேர்ந்த திரைப்படங்களின் வீடியோக்களை கடத்தி வருவோருக்கு மரண தண்டனை என்றும், வெளிநாட்டு படங்களை காணும் குடிமக்கள் ராணுவ வீரர்கள் என யாராக இருந்தாலும் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்றும் சட்டம் வகுக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டிவந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: