free website hit counter

சூர்யாவின் ‘வாடிவாசல்’ சோதனை படப்பிடிப்பில் என்ன நடந்தது?

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.
அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அவருடைய அடுத்த படம் வெற்றிமாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வெளியாகவிருக்கும் ‘வாடிவாசல்’. சி.சு.செல்லப்பா எனும் மணிக்கொடி இலக்கிய இயக்க எழுத்தாளர், ஜல்லிக்கட்டினை மையமாக வைத்து எழுதிய நாவலின் பெயரிலேயே இந்தப் திரைப்படம் உருவாகவுள்ளது. வெற்றிமாறனுடன் சூர்யா இணையும் முதல் படம் என்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில் நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வாடிவாசல் படத்தின் சோதனை படப்பிடிப்பு நடந்துள்ளது. அதில், 40 காளைகளை பயன்படுத்தி ஜல்லிக்கட்டு செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். இதில் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சூர்யா, கலைப்புலி தாணு ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். மூவருக்கும் தலைப்பாகை அணிவித்து பூஜை செய்த பொருட்களை வழங்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதேபோல் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இருவரும் ஜல்லிக்கட்டு செட்டில் வாடிவாசல் அருகே நிற்கும் புகைப்படங்களும் ரசிகர்கள் பிரபலமாகி வருகின்றன.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: