free website hit counter

சென்னையில் பிக்பாஸ் சீசன் 3 படப்பிடிப்பு அதிரடி நிறுத்தம் !

சின்னத்திரை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மோகன்லால் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் மலையாளம் சீசன் 3 நிகழ்ச்சியின் படப்பிடிப்புக் குழுவில் உள்ள ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருந்தனர்.

இவர்களுக்கு பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களுடனும் எந்த தொடர்பும் இல்லை என்று நிகழ்ச்சி தயாரிப்பாளர் தரப்பில் போலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்த மேலும் 3 பேர் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்ததும் பிக்பாஸ் வீடு பரபரப்பாகி செய்திகள் ஊடகங்களில் கசியத் தொடங்கியது.

சென்னை பூந்தமல்லியை அடுத்த ஈ.வி.பி. பிலிம் சிட்டியில்தான் படப்பிடிப்பு நடந்து வந்தது. தமிழ் பிக்பாஸ் முடிந்ததும் அந்த செட்டில் சிறு மாற்றங்கள் செய்து மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பை கடந்த 7 நாட்களாக நடத்தி வந்தனர். மோகன்லால் திருவனந்தபுரத்தில் இருந்தபடியே காணொளி வழியாக தொகுத்தி வழங்கி வந்தார். இந்நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கு அமலாகி படப்பிடிப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்ட நிலையில் மலையாளம் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வந்தது.

இந்த படப்பிடிப்பில் 150 பேர் தொழில்நுட்பக் கலைஞர்கள். படக்குழுவில் கொரோனா தொற்று குறித்து தகவல் கிடைத்ததும், பூந்தமல்லி தாசில்தார், உதவி கமிஷனர் சுதர்சனம் ஆகியோர் பிலிம் சிட்டிக்குள் சென்று சற்றுமுன் அதிரடி சோதனை நடத்தினார்கள். அந்தக் குழுவில் பூந்தமல்லி தாசில்தார், உதவி காவல் ஆணையர் சுதர்சனம் ஆகியோர் இருந்தனர். படக்குழுவுக்கு அபராதம் விதித்ததுடன் படப்பிடிப்பையும் தடை செய்தனர்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: