free website hit counter

பால்வெளி அண்டத்தின் மத்தியில் என்ன உள்ளது?

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எமது சூரிய குடும்பம் அமைந்திருக்கும் பால்வெளி அண்டத்தின் சூரிய குடும்பம் Galaxy) மையம் சூரியன் என்பதோ அல்லது மையத்தில் வேறு ஏதும் நட்சத்திரம் உள்ளது என்பதோ தவறான புரிதல் ஆகும்.

எமது சூரியனும், அதைச் சுற்றி வரும் கிரகங்கள், விண்கல் மண்டலங்கள், வால்வெள்ளிகள் அடங்கியுள்ள சூரிய குடும்பமும் பால்வெளி அண்டத்தின் மையத்தில் இருந்து 27 000 ஒளியாண்டுகள் தொலைவில் அதன் கரையில் அமைந்துள்ளன.

அப்படியாயின் பால்வெளி அண்டத்தின் மையம் யாது? உண்மையில் அநேகமான அண்டங்களின் மத்தியில் அமைந்திருக்கும் அதிநிறை கருந்துளைகளைப் (Super Massive Black Hole) போல், பால்வெளி அண்டத்தின் மையத்தில் உள்ள Sattigarius A* என்ற அதிநிறை கருந்துளை கூட அதன் மிகத் திருத்தமான மையம் அல்லவாம். எமது பால்வெளி அண்டம் அதன் திருத்தமான மைய்யப் புள்ளியைச் சுற்றி வரும் புள்ளி அந்த அண்டத்தில் உள்ள அனைத்துக் கூறுகளினதும் மொத்த ஈர்ப்பு விளைவின் கூட்டினால் தான் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இந்தப்புள்ளி Sattigarius A* என்ற அதிநிறை கருந்துளையின் மையம் அல்ல. அதற்கு சற்று அருகே தான் இப்புள்ளி அமைந்துள்ளது. இந்தப் புள்ளியில் இருந்தும் இக்குறித்த கருந்துளைக்குக் கடுமையான ஈர்ப்பு ஆற்றல் பிரயோகிக்கப் படுகின்றது. இதை இப்படி விளங்கிக் கொள்வோம். எமது சூரியனைச் சுற்றி வரும் 9 கிரகங்களும், ஏனைய விண் பொருட்களும் சூரியனின் மையப் புள்ளியைச் சார்ந்து சுற்றுவதில்லை. உண்மையில் சூரியனின் மையப் புள்ளியும் சூரிய குடும்பத்தின் மையப் புள்ளியும் ஒன்றல்ல.

எமது சூரிய குடும்பத்தின் கூறுகளின் மொத்த நிறையால் (Gravitational effects) தீர்மானிக்கப் படும் அதன் ஈர்ப்பு மையம் (Gravitational center) எதுவோ அதை மையமாகக் கொண்டு தான் சூரியன் உட்பட அனைத்துக் கிரகங்களுமே சுற்றி வருகின்றன. இந்த ஈர்ப்பு மையம் சூரியனுக்கு உள்ளே அதன் விட்டத்தில் சூரியனின் மையப் புள்ளியில் இருந்து தள்ளித் தான் அமைந்திருக்கும்.

இதே போன்று தான் பால்வெளி அண்டத்தின் ஈர்ப்பு மைய்யமும். இந்த ஈர்ப்பு மையம் பெரும்பாலும் வெற்றிடமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction