free website hit counter

சீனாவின் டியாங்கொங் ஓடத்துக்கு விண்வெளி வீரர்கள் மூவர் நாளை பயணம்!

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

விண்ணில் உலா வரும் சீனாவின் புதிய விண்வெளி நிலையத்துக்கான தனது முதல் விண்வெளி வீரருடன் கூடிய ராக்கெட்டை நாளை வியாழன் விண்ணில் ஏவுகின்றது சீனா.

இந்த விண்வெளி செயற்திட்டம் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பின்னதான சீனாவின் மிக நீண்ட கால விண்வெளி ஆய்வு குழு உறுப்பினர்களுக்கான செயற்திட்டமாகவும் அமைகின்றது.

இதன் மூலம் உலக நாடுகள் மத்தியில் சீனா தன்னை ஒரு விண்வெளி சக்தியாவும் நிலை நிறுத்திக் கொள்ளக் கூடிய வாய்ப்பும் கிட்டியுள்ளது. நாளை விண்ணுகுச் செல்லவுள்ள வீரர்கள் சுமார் 3 மாதங்கள் சீன விண்வெளி நிலையத்தில் தங்கியிருப்பார்கள் என்பதுடன் இவர்களுக்கு சுமார் 120 வகையான உணவுகளை உட்கொள்ள வசதியும், உபயோகிப்பதற்கு பொதுவான கழிவறை மற்றும் விருந்து அறை, தகவல் பரிமாற்ற அறை என்பவை போன்ற வசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன.

லோங் மார்ச் 2F ராக்கெட்டு மூலம் உள்ளூர் நேரப்படி காலை 9.22 மணிக்கு கோபி பாலைவனத்தில் உள்ள ஜின்குவான் ஏவுதளத்தி இருந்து வியாழக்கிழமை இந்த ராக்கெட்டு புறப்படுகின்றது என சீனாவின் CMSA என்ற விண்வெளி ஆய்வு ஏஜன்ஸி, புதன்கிழமை பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளது. வியாழன் விண்ணுக்குச் செல்லும் 3 வீரர்களுமே முன்பு சீன இராணுவத்தில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

இந்த வருடம் ஏப்பிரல் 29 ஆம் திகதி தான் சீனாவின் டியாங்கொங் என்ற விண்வெளி நிலையம் (அல்லது டியான்ஹே) சீன விஞ்ஞானிகளால் விண்ணுக்குச் செலுத்தப் பட்டிருந்தது. இதனை நாளை வியாழன் சென்றடையவுள்ள விண்கலத்துக்கு ஷென்ஷௌ-12 என்றும் பெயரிடப் பட்டுள்ளது. அடுத்த வருடம் இன்னும் 11 விண்வெளி செயற்திட்டங்களை குறித்த டியாங்கொங் விண்வெளி நிலையத்தை குறி வைத்து சீனா நிகழ்த்தவுள்ளது. இதில் அரைவாசி செயற்திட்டங்கள் ஆர்பிட்டரில் உள்ள டியாங்கொங் இன் சூரிய ஒளிப் படல்களை நிறுவதல் மற்றும் இரு ஆய்வு கூடங்களை உருவாக்குதல் போன்ற கட்டுமானப் பணிகளுக்காக நிகழ்த்தப் படவுள்ளன.

சர்வதேச நாடுகளின் கூட்டுப் பங்களிப்பில் பூமியைச் சுற்றி இயங்கிக் கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சீன விண்வெளி வீரர்கள் செல்ல அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதுவே சீனா தனது சொந்த முயற்சியில் விண்ணில் ஒரு ஆய்வு நிலையத்தை நிறுவுவதற்குத் தூண்டு கோலாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் தாம் அமைதியான நோக்கங்களுக்காக விண்வெளி ஆய்வில் பிற நாடுகளின் கூட்டுறவுடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளோம் என சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கூட்டுறவுடன் செயற்பட்டு வரும் ISS விண்வெளி ஓடம் 2024 ஆமாண்டு ஓய்வு பெறுகின்றது. ஆனாலும் 2028 இற்கும் பின்பும் தொடர்ந்து செயற்படக் கூடிய தன்மை ISS விண்வெளி நிலையத்துக்கு இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

மறுபுறம் சீனாவின் விண்வெளி ஆய்வு நிலையமான டியாங்கொங், ISS ஐ விட மிகச் சிறியதாகத் தான் இருக்கும் என்பதும், இதன் ஆயுள் காலமும் குறைந்த பட்சம் 10 வருடங்களாகத் தான் இருக்கும் என்றும் கருதப் படுவதும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction