free website hit counter

நீல அனார்கலி வெளியிட்ட புத்தகம்

சமூக ஊடகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நீல நிலவாக குடும்ப பெண் போல் கையில் ஒரு புத்தகத்தை கட்டி அணைத்தபடி வந்திருந்தார் அவர்.

இந்திய உடைகள் சேகரிப்பில் உங்கள் ஆடை அலமாரியை மெருகூட்டுவதற்கு எளிதாக இவரிடமிருந்து உத்வேகம் பெற முடியும். தென்றலான காட்டன் குர்தாக்கள், பெரிய எம்ப்ராய்டரி செய்யப்பட்ட கோ-ஆர்ட் தோற்றவகை ஆடைகள், காலனிகள், அணிகலன்கள் மற்றும் பலவற்றை அவரது அலமாரியில் காணலாம்.  அண்மைய விழா ஒன்றுக்கு அவரது மிகச் சமீபத்திய தேர்வு; இந்த அக்வா நீல நிற அனார்கலி, ஆடை; இது வீட்டில் நடக்கவிருக்கும் விழாவிற்கானது போன்ற மனநிலையை பிரதிபலிக்க வேண்டும். இப்படி அவரது ஆடை குறித்த விமர்சனங்களால் இந்நாட்களில் பிரபலமாகி வருகிறவர் வேறு யாருமல்ல முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் மகள் இஷா அம்பானி அவர்கள். 

 V வடிவ கழுத்துப்பட்டை,  முழு நீள மூடிய கை அதனுடன், சிஃப்பான் ரக பரந்த கரை கொண்ட துப்பட்டா என மின்னும் வெள்ளி மற்றும் வெள்ளை ஊடுருவும் எம்பிராய்டரி தையலால் அலங்கரிக்கப்பட்ட தரை-நீள அனார்கலி குர்தாவில் அவ்விழாவில் தோன்றினார். ஆடைப்பிரியர்களின் எண்ண அலையை இழுக்கும் இந்த பதிவுகள் சமூகவலைத்தளங்களில் பாய்ந்து அடிக்கிறது.

சர்வதேச கவனம் பெற்ற ஆனந்த் அம்பானி அவர்களின் பிரம்மாண்ட திருமண வைபவ இல்ல நிகழ்வுகளை அடுத்து அம்பானி தொடர்பாக பகிரப்பட்டு வரும் செய்திகளில் இஷா அம்பானியும் அடங்கியுள்ளார். 

இப்போது எதை வேண்டுமென்றாலும் மறைத்து அலங்கரித்து அழகாக தோன்றத்தை காட்டும் அறிவும் ஆற்றலும் ஏராளம் கொட்டிக்கிடக்கின்றன. மறைக்கிறோம் என்று மறந்துவிடும் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இப்படியான பதிவுகளும் தேவைப்படுவதை உபயோகிக்கவேண்டியுள்ளது.

மனிதப் புற்றுநோயில் மார்பகப் புற்றுநோயானது முன்னணியில் உள்ளது.  உலகெங்கிலும் மற்றும் இந்தியாவிலும் பெண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோயாக உருவெடுத்துள்ளதுடன் 2022 ஆம் ஆண்டில் மட்டும், 2.3 மில்லியன் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பெண்களில் புற்றுநோய் தொடர்பான இறப்புகளுக்கு முக்கிய காரணமாகவும் உள்ளது என ஆய்வில் கூறுகிறார்கள். இந்த ஆபத்தான புள்ளிவிவரங்களினால் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் அவசரத்தை அடிக்கோடிட்டு காட்டுவதன் நோக்கமாக 

சர் H.N. ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையால் India Breast Meeting -2024 எனும் மார்பக ஆரோக்கிய பராமரிப்பு குறித்த முக்கிய நிகழ்வு மும்பையில் நடைபெற்றுவருகிறது. இந்நிகழ்வில் ஆராய்ச்சி விளக்கக்காட்சிகள், குழு விவாதங்கள் மற்றும் ஊடாடும் பட்டறைகள் மூலம் மார்பக புற்றுநோயின் அதிகரித்து வரும் சுமையை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்வு நடைபெறுகிறது. 

இந்த நிகழ்வில் டாக்டர். விஜய் ஹரிபக்தி, (ஓன்கோ சயின்சஸ் தலைவர்) எழுதிய  "Being Breast-Aware: ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டியவை", எனும் புத்தகத்தை இஷா அம்பானி அவர்கள் கலந்துகொண்டு வெளியிட்டு வைத்தார். இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவதற்காக  புறப்பட்ட இஷா அம்பானி அவர்களின் ஆடை குறித்த பதிவுகளே அவை.

 உலகளாவிய மார்பக புற்றுநோய் மாநாட்டின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டுள்ள இந்த புத்தகம் மருத்துவ நிபுணர்கள் மூலம் துல்லியமான தகவல்களை வழங்குவதையும், மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதற்கும், முன்கூட்டியே கண்டறிவதற்கும், உகந்த பராமரிப்புக்கும் உதவும் ஒரு கருவியாகச் செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது.  ஆடைகள் அணிந்து மறைத்துக்கொண்டிருக்காமல் முன்கூட்டிய விழிப்புணர்வுடன் செயற்பட மறவாமல் இருப்பது நலம். 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction