free website hit counter

ஆழ்கடலில் மீன் பிடிக்க உரிமம் (Licence)பெற்ற முதல் பெண்மணி...!

சமூக ஊடகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

46 வயது; 4 குழந்தைகளின் தாய் சசிரேகா. கணவர் P.கார்த்திகேயன். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், சாவக்காடு, சேற்றுவா கடற்கரை கிராமத்தைச் சேர்ந்தவர். தன் கணவரோடு மீன் பிடிக்கச் சென்று கொண்டிருந்த இருவர் தங்களுக்குக் கட்டுப்படியாகவில்லை என்று விலகிச் சென்ற உடனே, ரேகா களத்தில், இல்லை இல்லை, அரபிக்கடலில் குதித்து விட்டார்.

கேரள மாநில மீன் வளத்துறையிடம் இருந்து (State Fisheries Department) ஆழ்கடலில் மீன் பிடிக்க உரிமம் (Licence) பெற்ற கையோடு, தன் கணவரோடு இணைந்து, தங்களுக்குச் சொந்தமான சிறிய, பழைய படகில் தங்கள் குடும்பத்தைக் காக்க, இப்போது அன்றாடம், 20/30 மைல் தூரம் (Nautical Miles) அரபிக் கடலின் ஆழமான பகுதிகளில் மீன் பிடிக்கச் சென்று வருகிறார் ரேகா என்ற இந்தப் பெண்மணி.

எந்தவித நவீன கருவிகளும் இல்லாமல் ஆழ்கடலில் பயணிக்கும் போது,"எங்களைக் கடலம்மா பாதுகாப்பார்" என்று குறிப்பிடுகிறார் ரேகா. Central Marine Fisheries Research Institute (CMFRI)இயக்குனர், A.கோபாலகிருஷ்ணன், "காயல்களிலும், ஆறுகளிலும் மீன் பிடிக்கச் செல்லும் பெண்களை நாங்கள் அறிவோம்; ஆனால் ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் முதல் பெண்மணி, ஒரே பெண்மணி ரேகா தான் என்பதை, நாங்கள் ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction