free website hit counter

சிவ சிந்தை மிகு சண்டேஸ்வர நாயனார்

செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சிவ பெருமானை வணங்குபவர்கள் சண்டிகேஸ்வரரை வணங்காமல் இருக்க முடியாது. சிவபெருமான் பிரகாரத்தை சுற்றி வருகையில் அவருக்கு இடது புறம் அமர்ந்திருப்பவர்.நம்மில் பெரும்பாலானவர்களுக்கு சண்டிகேஸ்வரர் என்பதை விட, கைகளை தட்டி வணங்கும் தெய்வம் என்றால் எளிதில் நினைவு வரும்.

யார் இந்த சண்டிகேஸ்வரர் இவரை வணங்கும் போது, ஏன் கைகளை தட்ட வேண்டும்? பெரியாபுராணத்தின் படி சண்டிகேஸ்வரரின் இயற்பெயர் விசாரசர்மன். இவர் சிறு வயதாக இருந்த போது மாடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார்.. சிறு வயதிலேயே சிவ பக்தி மேலோங்கி இருந்ததால் மாடு மேய்க்கும் தொழில் செய்கையில் பணிக்கு இடையே மணலால் சிவலிங்கம் செய்து ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டு வந்தார்.

இவரின் தவ வலிமையாலும், தன்னுடைய மேய்ப்பான் மீது கொண்டிருந்த அதீத அன்பினாலும், விசாரசர்மன் மேய்த்த மாடுகள் அவர் உருவாக்கிய மணல் லிங்கத்தின் மீது தானாக பாலை சுரந்து அபிஷேகம் செய்தன. இந்த நிகழ்வு தினசரி தொடர்ந்தது. இந்த செய்தி மாட்டின் உரிமையாளரை எட்டிய போது அவர் விசாரசர்மனின் தந்தையான எச்சதத்தனிடம் சென்று, "உங்கள் மகன் மணல் லிங்கம் அமைத்து தியானிக்கிறான். அதற்கு என் பசுக்களை கொண்டு அபிஷேகம் செய்ய வைக்கிறான். இதனை கண்டியுங்கள் என புகார் அளித்தார் ".

இதனை ஆராய விரும்பிய எச்சதத்தன் ஒரு நாள் மறைதிருந்து கண்காணித்தார். அப்போது மணல் லிங்கத்தின் முன் விசாரசர்மன் ஆழ்ந்த தியானத்தில் இருக்க, மாடுகள் தாமாகவே லிங்கத்தின் மீது பால் சுரந்து அபிஷேகம் நிகழ்த்தின. இதனை கண்டு கடும் சினம் கொண்ட தத்தன் அந்த மணல் லிங்கத்தை காலால் தகர்த்தார்.
இதனால் தவம் களைந்து எழுந்த விசாரசர்மன் ஒரு குச்சியால் தந்தையின் காலை தாக்கினார். அந்த குச்சி கோடாரியாக மாறி அவர் தந்தையின் காலை கடுமையாக தாக்கியது. அப்போது தோன்றிய சிவபெருமான், விசாரசர்மனின் பக்தியை மெச்சி அவர் தந்தையின் கால்களை சீராகி. விசாரசர்மனுக்கு ஆச்சர்ய வரமொன்றை அளித்தார்.

அதாவது அன்று முதல் அவர் சண்டிகேஸ்வரர் என்றும், சிவனின் சொத்துக்களான கணங்கள் அனைத்தையும் காவல் காப்பவராக அவர் திகழ்வார் எனவும், தனக்கு நிகழ்ந்த பூஜைகளும் மரியாதையும் இனி அவருக்கும் கிடைக்கும் எனவும் அருளினார். இதனை அடுத்து சிவ கணங்களை, சிவன் சொத்துக்களை காவல் காத்து ஆழ்ந்த தியானத்தில் இருக்கிறார் சண்டிகேஸ்வரர்.

எனவே சிவனை வணங்கி வரும் பக்தர்கள் இவரிடம் வந்து, மிக மென்மையாக கைகளை உதறி தாம் எந்த சிவ சொத்தையும் எடுத்து செல்லவில்லை. அவருடைய அருளையும், ஆசியையும் தவிர வேறு எதையும் எடுத்து செல்லவில்லை என கைகளை உதறி காட்ட வேண்டும். பிரசாதத்தை எடுத்து செல்லும் அனுமதியை அவரிடம் கேட்டு எடுத்து செல்ல வேண்டும்.

இந்த கைகளை உதறும் வழக்கமே கால போக்கில் கைகளை தட்டும் பழக்கமாக மாறிவிட்டது. எனவே அவருடைய தவத்தை கலைக்கும் வண்ணம் கைகளை தட்டாமல், மென்மையாக கைகளை உதறி சண்டிகேஸ்வரரை வணங்குவது நன்மை பயக்கும். இவர் 63 நாயன்மார்களுள் ஒருவராகவும் இருக்கிறார். இன்று சண்டிகேஸ்வரர் குரு பூசை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction