சுவிற்சர்லாந்தில் கோவிட் பெருந்தொற்றின் அச்சம் பொது மக்கள் மத்தியில் குறைந்து வரும் நிலையில், நாளை ஆரம்பமாகும் பெப்ரவரி மாதத்தில் பல பதிவுத் திருமணங்கள் நடைபெறவுள்ளதாகத் தெரியவருகிறது.
பெப்ரவரி 14 ந் திகதி காதலர் தினத்தையொட்டி இத் திருணங்கள் நடைபெறுவதாக இதனை கருதி விடமுடியாது. காரணம், இத் திருமணங்கள் பலவும், பெப்தவரி 02ந் திகதி மற்றும் 22ந் திகதி நடைபெறவுள்ளது. பல நகரங்களில், இத் திகதிகளில் திருமண விழாக்களுக்காக முழுவதுமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2.2.2022 மற்றும் 22.2.2022 ஆகியவை "பலிண்ட்ரோமிக் திகதிகள்" என்று அழைக்கப்படுபவை . முன்னோக்கிய மற்றும் பின்னோக்கிய திகதிகளாக அமையும் இந்நாட்களை அதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதுவதால் காதலர்கள் பலரும் இத் திகதிகளில் தங்கள் திருமணப் பதிவுகளை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.
இதனால் சூரிச், பாசல், பேர்ன், வோட், ஜெனிவா மற்றும் வலாய்ஸ் ஆகிய நகரங்களில் உள்ள பல சிவில் திருணப் பதிவு அலுவலகங்கள், அந்த இரண்டு நாட்களில் திருமணப் பதிவுகளுக்கான நேரங்கள் முழுமை பெற்றதாகவும், சில இடங்களில் இந்த திகதிகளுக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டியிருந்தது என்றும் அறிய வருகிறது.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    