குளத்தில் தாமரை வட்ட இலையோடு வளரும் எனவும் தமிழகத்தில் தாமரை இரட்டை
இலையோடு மலரும் என்றும் பா.ஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்
கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணாமலை
அனைத்து தர மக்களிடமும் குறிப்பாக இளைஞர்களிடம் கட்சியை எடுத்துச் சென்றதில் மிக
முக்கிய பங்காற்றியதில் மட்டுமல்லாமல் பா.ஜ.,வை பற்றி பேசாமல் தமிழகத்தில் எந்த
நிகழ்வும் நடக்காது என்ற நிலைக்கு கொண்டு வந்தார் என புகழாரம் சூட்டினார். நயினார்
நாகேந்திரன் தமிழகத்தில் அடித்தளம் அமைப்பார் எனவும் ஒன்றிணைந்து
பணியாற்றுவோம் என்றும் தமிழிசை கூறியுள்ளார்.