free website hit counter

நீட் தேர்வின் வயது வரம்பு தளர்வு - தேசிய மருத்துவ ஆணையம்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இளநிலை மருத்துவப் படிப்பில் (எம்பிபிஎஸ்) சேர, நீட் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பு குறித்து தேசிய மருத்துவ ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பில் சேர, நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக எதிர்த்துவரும் நிலையில், இந்த தேர்வு தொடர்பான மற்றொரு முக்கிய அறிவிப்பை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.
br> நீட் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பு இனி இல்லை என்று ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. ஆணையத்தின் இந்த அறிவிப்பை குடியுரிமை மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. 'நீட் தேர்வு எழுத அதிகபட்ச வயது வரம்பு 25-ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது அது நீக்கப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
br> நாட்டில் ஏற்கெனவே மருத்துவர்கள் பற்றாக்குறை இருந்துவரும் நிலையில், இந்த நடவடிக்கை மூலம் அதிகம் பேர் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும். நாட்டில் அதிக மருத்துவர்களை உருவாக்க இயலும் என்று அந்த கூட்டமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: