இந்தியத் தலைநகர் புது தில்லியில் இன்று திங்கள்கிழமை நடந்த கார் குண்டு வெடிவிபத்தில் குறைந்தது எட்டுப்பேர் வரையில் கொல்லப்பட்டதாகவும், 15 பேர்களுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் செய்தித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி, செங்கோட்டை அருகே உள்ளூர் நேரம் மாலை 6.52 மணியளவில் (01.22GMT)கார் குண்டுவெடிப்புத் தொடர்பில், காவல்துறையினர் உடனடி மீட்புப் பணிகளும், காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சேர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, அருகிலுள்ள வாகனங்களும் தீப்பிடித்து சேதம் அடைந்ததாகவும், தீ மேலும் பரவாதிருக்க, டெல்லி தீயணைப்புப் படையினர் விரைந்து செயற்பட்டு நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அறிக்கை மேலும் கூறியது.

குண்டு வெடிப்புத் தொடர்பான விசாரணைகள் உடன் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருவதாகவும், சிவப்பு சிக்னல் விளக்கில் நின்ற கார் மெதுவாக நகர்கையில் வாகனத்திலிருந்து வெடிப்பு ஏற்பட்டதாகத் தெரிய வருவதாக டெல்லி போலீஸ் கமிஷனர் சதீஷ் கோல்ச்சா சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். வெடிப்பு நடந்தபோது "பலத்த சத்தம்" கேட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
விசாரணைகள் துரிதப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமைகள் குறித்து ஆலோசித்துள்ளதாகவும் அறியவருகிறது.
