பாகிஸ்தான் படங்கள் காட்சிப்படுத்துவதை நிறுத்துமாறு OTT தளங்களுக்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பின் பாகிஸ்தானை தாயகமாக கொண்ட ஃபவாத் கான், மஹிரா கான், ஹனியா அமீர், அதிஃப் அஸ்லம் உள்ளிட்ட நடிகர்களின் சமூக வலைத்தள கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டது.
தொடர்ந்து ஃபவாத் கான் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் (PBA) நாடு முழுவதும் உள்ள பாகிஸ்தான் எஃப்எம் (FM) வானொலி நிலையங்களில் இந்திய பாடல்களை ஒளிபரப்ப தடை விதித்தது.
இந்த நிலையில் OTT தளங்களக்கு இந்திய அரசு கட்டுபாடு விதித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,தேசியப் பாதுகாப்பின் நலனுக்காக, இந்தியாவில் செயல்படும் அனைத்து OTT தளங்கள், மீடியா ஸ்ட்ரீமிங் தளங்கள் பாகிஸ்தானின் வெப் சீரீஸ்கள், திரைப்படங்கள், பாடல்கள், பாட்காஸ்ட்கள் மற்றும் பிற ஸ்ட்ரீமிங் மீடியா உள்ளடக்கத்தை உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    