free website hit counter

முதல்வரின் அறிவிப்பை வரவேற்று நன்றி தெரிவித்தார் சீமான்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு தமிழக அரசு 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பினை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது.

இந்த பொங்கல் தொகுப்பு இலங்கை தமிழர் முகாமில் உள்ள தமிழர்களுக்கும் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதனை வரவேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ள ஈழச்சொந்தங்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கின்ற செய்தியறிந்தேன். நிலத்தை இழந்து, உரிமை இழந்து, உடைமை இழந்து, உறவுகளைச் சாகக்கொடுத்து, ஆதரவற்ற சூழலில் தாய்த் தமிழகத்தை நம்பி வந்துள்ள ஈழச் சொந்தங்களுக்கு கரம்கொடுத்து பக்கத் துணையாக நிற்க வேண்டியது தமிழக அரசின் தார்மீகக்கடமையாகும்.

பெரும் பொருளாதார நலிவு நிலையிலிருக்கும் ஈழச்சொந்தங்களுக்கு ஆறுதலளிக்கும் விதத்தில், பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதற்கு ஏதுவாகப் பொருட்களை வழங்குவதாகக் கூறியிருக்கும் தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன். அதற்கு எனது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்!
இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: