பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இருநாடுகளும் ராணுவ படைகளை தயார் நிலையில் வைத்திருக்கும் நிலையில், நாடு தழுவிய போர்க்கால ஒத்திகையை மே 7ந் திகதி நடத்துமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
இந் நிலையில், தமிழகத்தில் 4 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடத்தப்படுகிறது. கல்பாக்கம், மீனம்பாக்கம், ஆவடி, மணலி ஆகிய 4 இடங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் சென்னை
துறைமுகத்தில் போர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்த தமிழக பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.இந்த ஒத்திகையால் பொது மக்கள் அச்சப்படத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
போர் பதற்ற சூழலின் போது மக்களை எப்படி பாதுகாப்பது, பதற்றமான சூழலில் மக்களை எப்படி வெளியேற்றுவது, தாக்குதலில் இருந்து எவ்வாறு தப்பித்துக் கொள்வது உள்ளிட்ட ஒத்திகைகள் நடத்தப்படும். 54 ஆண்டுகள் கழித்து(இதற்கு முன்னர் 1971ல் நடந்தது) இந்தியாவில் மே 7 ஆம் தேதி போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது என்பது
குறிப்பிடத்தக்கது.