போலீஸ் காவலில் இறந்த நபரின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆக்ராவுக்கு சென்றபோது அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். அப்போது சில பெண் போலீசார் பிரியங்காவிடம் வந்து செல்ஃபி படங்களை எடுத்துக்கொண்டனர்.
தமிழக எதிர்க்கட்சி தலைவர் மருத்துவமனையில் அனுமதி
தமிழக எதிர்க்கட்சி தலைவர் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்பது மூடநம்பிக்கை - கமல்ஹாசன்
இந்தியாவின் தேசிய மொழி இந்தியே என்பது மூடநம்பிக்கை. இந்த நம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான, கமல்ஹாசன், தனது டுவிட்டர் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பான அறிவிப்பு
பள்ளி ஆசிரியர் நியமன வயது உச்ச வரம்பை 5 ஆண்டுகள் அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் இல்லத்தில் சோதனை
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் முதல் மதுபான அருங்காட்சியகம் கோவாவில்!
குடிமகன்களை கவரும் வகையில் கோவாவில் மதுபானங்களுக்கென தனி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்துக்கு ‘All About Alcohol' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கேரளாவில் தொடர் கனமழை பாதிப்பு
கடந்த 2 நாட்களாக கேரளா முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.