free website hit counter

ஓய்வை அறிவித்தார் அலெக்ஸ் ஹேல்ஸ்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸ் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் அறிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் இங்கிலாந்து அணிக்காக பல்வேறு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அலெக்ஸ் ஹேல்ஸ் விளையாடியுள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு அழைக்கப்பட்ட அலெக்ஸ் ஹேல்ஸ் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டிகளின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்காக கடைசியாக விளையாடினார்.

அந்த தொடரில் இந்திய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஜோஸ் பட்லருடன் இணைந்து ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்கள் குவித்தார்.

ஒய்வு முடிவு குறித்து அலெக்ஸ் ஹேல்ஸ் கூறியதாவது,

இங்கிலாந்து அணிக்காக அனைத்து வடிவங்களிலும் விளையாடியது என்னுடைய பாக்கியம். இப்போது அந்த பயணத்தை பற்றி நினைத்து பார்க்கிறேன்.

மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நான் செய்த பல செயல்கள் நினைவில் உள்ளது. ஆனால் டிரெண்ட் பிரிட்ஜில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் செய்த உலக சாதனையை இப்போது திரும்பி பார்க்கிறேன்.

டி20 போட்டியின் வெற்றியாளராக இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இருந்து விடைபெறுவது சரியான முடிவு என்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction