இலங்கை கிரிக்கெட் வீரர்களான துஷ்மந்த சமீர, மதீஷ பத்திரன, டில்ஷான் மதுஷங்க மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் காயங்களில் இருந்து முழுமையாக குணமடையாததால், இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரை இழக்க நேரிடும்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 இந்த சீசன் ஐபிஎல் முடிந்த சில நாட்களில் தொடங்கும் நிலையில், முழு உடல் தகுதி இல்லாத மற்றும் காயங்களில் இருந்து மீண்டு வரும் வீரர்களை விடுவிக்க இலங்கை கிரிக்கெட் (SLC) முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பங்களாதேஷில் டெஸ்ட் அணியில் தொடர வேண்டிய வனிந்து ஹசரங்க, குதிகால் காயத்துடன் பங்களாதேஷ் தொடரில் விளையாடினார்.
இதுவரை இலங்கையைச் சேர்ந்த மகேஷ் தீக்ஷனா மற்றும் நுவான் துஷாரா ஆகியோர் மட்டுமே அந்தந்த ஐபிஎல் அணிகளில் இணைந்துள்ளனர்.
ஐபிஎல் தொடர் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.