free website hit counter

முதல் அணியாக 1000-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்தியா - கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை!

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு
3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாட உள்ளது. இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நாளை நடக்கிறது.

இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் இந்திய அணி புதிய வரலாற்றை படைக்க இருக்கிறது. அதாவது இந்திய அணி 1000-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் முதல் அணி என்ற சாதனையை படைக்க உள்ளது.

இந்திய அணி முதல் முறையாக 1974-ம் ஆண்டு ஜூலை 13-ந் திகதி இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியை விளையாடியது. இதில் 4 விக்கெட் வித்தியாத்தில் தோல்வியை தழுவியது.

ஒருநாள் போட்டி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இதுவரை உலகளவில் 28 அணிகளால் 4 ஆயிரத்துக்கும் அதிகமான ஒருநாள் போட்டிகள் விளையாடப்பட்டுள்ளன. தற்போது ஒருநாள் ஆட்டத்தில் 1000-ஆவது போட்டியில் விளையாட உள்ள முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெறுகிறது. இதற்கு அடுத்த படியாக ஆஸ்திரேலியா அந்த நிலையை அடையும்.

முதல் போட்டிக்கு அஜீத் வடேகரும், 100-வது போட்டிக்கு கபில்தேவும், 200-வது மற்றும் 400-வது போட்டிக்கு அசாருதீனும், 300-வது போட்டிக்கு தெண்டுல்கரும், 500-வது போட்டிக்கு கங்குலியும், 600-வது போட்டிக்கு ஷேவாக்கும், 700, 800, மற்றும் 900-வது போட்டிகளுக்கு டோனியும் கேப்டனாக இருந்துள்ளனர். ஆயிரமாவது ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக பொறுப்பேற்கும் பெருமையை ரோகித் சர்மா பெறுகிறார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 1000-வது போட்டி என்பதால் இந்திய அணி விளையாடும் ஆட்டத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: