free website hit counter

வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி திகதி அறிவிப்பு !

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எதிர்வரும் 21ம் திகதி முதல் வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர்,

வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முதற்கட்டமாக 15 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை ஒரு தடவை மட்டும் செலுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதன்படி எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

முதலில் 19 வயதுடைய மாணவர்களுக்கும் அதன் பின்னர் 18 என்ற அடிப்படையில் 17, 16, 15 என கட்டம் கட்டமாக தடுப்பூசிகள் செலுத்தப்படும் எனவும் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார் .

அதோடு மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகள் ஊடாக தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்றும், குறித்த வயதுகளையுடைய பாடசாலைகளிலிருந்து இடை விலகியவர்கள் தமது பகுதி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள் ஊடாக தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: