free website hit counter

ஜனவரி 15 முதல் மின் கட்டணம் அதிகரிப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஜனவரி 15 ஆம் திகதி முதல் மின் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.
அமைச்சரவையின் அனுமதியின் பிரகாரம் ஜனவரி 15 ஆம் திகதி முதல் மின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணம் தொடர்பிலான தரவுகளை ஒரு மாதத்திற்குள் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர், பொறியியலாளர் ரோஹான் செனவிரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை வழங்கிய அனுமதியின் பிரகாரம், ஜனவரி 15 ஆம் திகதி முதல் வீட்டுப் பாவனை மின்சார அலகிற்கான நிலையான கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம், 0 -30 அலகுகளுக்கான நிலையான கட்டணம் 120 ரூபாவிலிருந்து 400 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

31-60 அலகுகளுக்கான நிலையான கட்டணம் 240 ரூபாவிலிருந்து 550 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

60-90 அலகுகளுக்கான நிலையான கட்டணமும் 90-180 அலகுகள் வரையான நிலையான கட்டணமும் முறையே 650 ரூபாவாகவும் 1500 ரூபாவாகவும் அமைந்துள்ளது.

180 அலகுகளுக்கு மேல் 1500 ரூபாவாக இருந்த நிலையான கட்டணம் 2000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டணங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவையாவன…
அலகு 0-30 – 400 ரூபா
அலகு 31 -90 – 550 ரூபா
அலகு 90-120 – 650 ரூபா
அலகு 120 – 180 = 1500 ரூபா
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: