கடந்த வெள்ளிக்கிழமை (17) முதல் இலங்கையில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட ரூ.60,000 குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் தங்க வியாபாரிகளின் கூற்றுப்படி, இன்று (22) மட்டும் ரூ.20,000 விலை சரிவு பதிவாகியுள்ளது.
கொழும்பு புறக்கோட்டை தங்க சந்தையில் வெள்ளிக்கிழமை ரூ.379,200 ஆக இருந்த 22 காரட் பவுனின் விலை ரூ.322,000 ஆக குறைந்துள்ளது.
இதே காலகட்டத்தில் 24 காரட் பவுன் ரூ.410,000 ஆக இருந்த விலை ரூ.350,000 ஆக குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.