free website hit counter

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
45 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டது.

45 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூடிய நம்பிக்கையில்லாப் பிரேரணை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன ஆகியோரால் சபாநாயகருக்கு கையளிக்கப்பட்டது.

தரமற்ற மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களை பொறுப்பற்ற முறையில் இறக்குமதி செய்ததன் காரணமாக சுகாதாரத் துறை பலவீனமடைந்து நாட்டில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவராக சுகாதார அமைச்சர் இருக்கிறார். ஆகவே, அவர் உடனடியாக பதவி விலக வேண்டுமென குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவது தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்த பின்புலத்திலேயே இன்று குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாராயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction