free website hit counter

QR குறியீட்டு முறை இரத்தாகும் காலம் பற்றி தெரிவிப்பு - அமைச்சர் காஞ்சன விஜேசேகர

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
எரிபொருள் விநியோகத்திற்காக இலங்கையில் நடைமுறையிலுள்ள QR முறை தொடர்பில் அறிவிப்பு.
தேசிய எரிபொருள் விநியோகத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீட்டு முறையானது இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் இரத்துச் செய்யப்படுவதாகவும், சாதாரண நிலைமைகளின் கீழ் நாட்டில் தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், சீரான எரிபொருள் விநியோகத்துக்கான தற்காலிக தீர்வாக QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

நாட்டில் அடுத்த சில மாதங்களுக்கு மின்சார தட்டுப்பாடோ அல்லது எரிபொருள் தட்டுப்பாடோ ஏற்படாது என உறுதிப்படுத்த முடியும் என தெரிவித்துள்ள மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர, QR குறியீடுகளின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட எரிபொருளை வழங்குவது மூன்று மாதங்களுக்குள் இடைநிறுத்தப்படும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரையில் மின்சாரத்தை வழங்குவதற்கான நிலக்கரியை இலங்கை மின்சார சபை பெற்றுக்கொண்டுள்ளதாகவும், நிலக்கரி கப்பல்களுக்கான நிதியும் செலுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: