free website hit counter

ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு !

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கைத் தலைநகர் கொழும்பு, காலி முகத்திடலில் தொடர்ந்து 5வது நாளாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

அவர்களை கலந்துரையாடலுக்கு அழைப்பதாகவும், பேச்சுவாரத்தை நடத்தத் தயாராக உள்ளதாகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருப்பதாக அறியவருகிறது.

நாடளாவிய ரீதியில் இருந்து வந்துள்ள இளைஞர்களால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் கடந்த 9ம் திகதி முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டம் இரவு பகலாக இடம்பெற்று வருகின்றது.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு கோரியும், ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் கலந்துரையாட அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: