free website hit counter

பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரின் அலுவலகத்திற்கு சீல் வைப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவின் காரியாலயம் சீல் வைக்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய, கொள்ளுப்பிட்டி பொலிஸார் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரின் அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளனர்.

இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ உறுதிப்படுத்தினார்.

அலுவலகத்திற்குள் அரசாங்கத்திற்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக கிடைத்த தகவலுக்கு அமைய, அது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கையிட்டு இந்த உத்தரவு பெறப்பட்டதாக அவர் கூறினார்.

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், அவர் நாடு திரும்பியதும் அவர் முன்னிலையில் அலுவலகம் மீண்டும் திறக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: