இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ளது! இலங்கை Previous Article அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி செயலாளர் வழங்கியுள்ள முக்கிய உத்தரவு Next Article உயர்தரப் பரீட்சைக்கு 80% வருகை தேவையில்லை Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம், சில புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர் அமைப்புக்கள் மீதான தடையை அதிரடியாக நீக்கியுள்ளது. அதற்கமைய உலகத் தமிழர் பேரவை மற்றும் அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மீதான தடைகளை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது. பிரிட்டன் தமிழர் பேரவை, கனடா தமிழ்க் காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது. முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கமும், கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் நபர்களை தடை செய்து இருந்தன. மேலும் நல்லாட்சி அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. Previous Article அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி செயலாளர் வழங்கியுள்ள முக்கிய உத்தரவு Next Article உயர்தரப் பரீட்சைக்கு 80% வருகை தேவையில்லை