அடுத்த வருடத்திற்குள் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றமடையும் பட்சத்தில் வாகன இறக்குமதி தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தெமட்டகொடையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக 13 பில்லியன் ரூபா மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன்படி, ஏப்ரல் மாதத்திற்கான அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக 107 பில்லியன் ரூபா செலுத்தப்பட்டது.
இதேவேளை, ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான 2.7 மில்லியன் குடும்பங்களுக்கு பத்து கிலோகிராம் அரிசி வழங்கும் வேலைத்திட்டம் ஏப்ரல் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.இலங்கையில் உள்ள மொத்த குடும்பங்களில் பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த மானியத்திற்கு உரிமை உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.