free website hit counter

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRCSL) எதிர்காலத்தில் நாட்டில் பதிவு செய்யப்படாத மொபைல் போன்கள் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

2025 நிதியாண்டில் அரசாங்க செலவினங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கான ஒதுக்கீட்டு மசோதாவை பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

லோன்லி பிளானட் கொழும்பு-பதுளை ரயில் பயணத்தை 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் 7வது சிறந்த ரயில் பயணமாக தரவரிசைப்படுத்தியுள்ளது.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRCSL) சமூக ஊடகங்களில் பரவும் மோசடியான குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் பொதுமக்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்களை பகிர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நேற்று (6) இரவு நடைபெற்ற ‘தெரண 360°’ நிகழ்ச்சியின் போது வாகன இறக்குமதியின் எதிர்காலம் குறித்த தனது பார்வையை பகிர்ந்து கொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் தற்போது குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதன் முடிவுகளின் அடிப்படையில் அவரது தலைவிதி தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போது சீனாவில் பரவி வரும் Human Metapneumovirus (HMPV) என்பது இலங்கையில் ஏற்கனவே சில சந்தர்ப்பங்களில் அடையாளம் காணப்பட்ட ஒரு நோயாகும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI) உறுதிப்படுத்தியுள்ளது.

மற்ற கட்டுரைகள் …