free website hit counter

5.8 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான இறுதி மறுசீரமைப்பு உடன்படிக்கையை இலங்கை தனது இருதரப்பு கடன் வழங்குனர்களின் உத்தியோகபூர்வ கடன் குழுவுடன் இன்று பிரான்சின் பாரிஸில் எட்டியுள்ளது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளனர்.

432 குடும்பங்களைச் சேர்ந்த 946 பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (டிஎம்சி) தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபையானது இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவைகளின் தரம் மற்றும் பயன்பாட்டினை மேம்படுத்துவதற்காக 150 மில்லியன் டொலர் நிதியுதவிக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இந்திய அரசாங்கத்துடன் இணைந்து திருகோணமலையை ஒரு முக்கிய எரிசக்தி மையமாக மாற்றுவதற்கான முயற்சிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சமூகத்தினருடனான சந்திப்பின் போது விரிவாக விளக்கினார்.

இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின்  முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. சுமார் 30 நிமிடங்கள் மாத்திரம் நீடித்த இந்தச் சந்திப்பில், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளடங்கிய எட்டுப் பேர் கலந்து கொண்டனர். தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, புளொட், ரெலோ, தமிழ் மக்கள் கூட்டணி என்ற ஐந்து கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். தமிழரசுக் கட்சிக்குள்ளேயே பல பிரிவுகள், பல கோணத்துப் பயணம். நிலைமை அப்படியிருக்க, தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றாக அழைத்துப் பேசுதல் என்பது ஆச்சரியமூட்டும் செய்திதான்.

மற்ற கட்டுரைகள் …