free website hit counter

வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பான இறுதித் தீர்மானம் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் மற்றும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான தாள் குறியிடல் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று நண்பகல் 12 மணிக்கு அல்லது அதற்கு முன்னதாக தத்தமது புகையிரத நிலையங்களுக்கோ அல்லது அருகிலுள்ள புகையிரத நிலையத்திற்கோ தெரிவிக்குமாறு அனைத்து ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்களுக்கு இலங்கை ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜூலை 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் கடமைக்கு சமூகமளித்த நிறைவேற்று அதிகாரமற்ற அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

வரி வருவாயை அதிகரிக்கும் முயற்சியில், அரசாங்கம் முன்னர் கவனிக்காமல் இருந்த 14 துறைகளை கட்டாய வரி செலுத்துவதற்காக பதிவு செய்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.

200 க்கும் மேற்பட்ட பொதுத்துறை தொழிற்சங்கங்கள் நேற்று (8) சுகயீன விடுப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன, அது இன்றும் (9) தொடர்வதாக மாகாண பொதுச் சேவை சங்கங்களின் கூட்டுக்குழு தெரிவித்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …