இஸ்ரேல் - காசா கெரெம் ஷாலோம் எல்லையில் 4 உதவி விநியோக மையங்களை நிறுவியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
இந்த உதவி மையங்கள், சர்வதேச உதவி அமைப்புகளாலும், அமெரிக்க சிவில் பாதுகாப்பு நிறுவனத்தாலும்,பாதுகாக்கப்படும் மையங்கள் என இஸ்ரேலிய இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள உதவி அமைப்புகளின் பெயரை இராணுவம் குறிப்பிடவில்லை.
இஸ்ரேலிய இராணுவத்தால் வெளியிடப்பட்ட வரைபடத்தின்படி, மூன்று மையங்கள் மொராக் அச்சு என்று அழைக்கப்படும் பகுதியிலும், நான்காவது நெட்சாரிம் பகுதியிலும் அமைந்துள்ளது. டெல் அல்-சுல்தானிலும், ரஃபா பகுதியில் உள்ள மொராக் பகுதியிலும் அமைந்துள்ள இரண்டு மையங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் செயல்படத் தொடங்கியுள்ளதாகவும், காசா பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உணவுப் பொதிகளை விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மார்ச் 2 முதல் உணவு, மருத்துவம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு இஸ்ரேல் காசா கடவைகளை மூடி வைத்துள்ள நிலையில், கடுமையான மனிதாபிமான நெருக்கடி குறித்து மனித உரிமைகள் மற்றும் சர்வதேசங்கள் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. ஆயினும் சர்வதேச அழைப்புகளை நிராகரித்த இஸ்ரேலிய இராணுவம், காசா மீது மிருகத்தனமான தாக்குதலைத் தொடர்ந்தது, இதில் 54,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்என்பது குறிப்பிடத்தக்கது.