இந்தோனேசியாவின் தனிம்பார் தீவுகள் பகுதியில் திங்கள்கிழமை (ஜூலை 14) 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் 98 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதுடன், சுனாமித் தாக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) நிலநடுக்கம் 6.8 ரிக்டர் அளவிலானதாகவும் 10 கி.மீ ஆழத்திலும் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.கிழக்கு இந்தோனேசியாவின் பல சிறிய நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந் நிலநடுக்கம் காரணமாகச் சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என்று இந்தோனேசியாவின் பேரிடர் தணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.