free website hit counter

ஸ்பெயின் அதிவேக ரயில் விபத்தில் குறைந்தது 39 பேர் பலி !

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஸ்பெயினின் மலகாவிலிருந்து மாட்ரிட் செல்லும் அதிவேக ரயில் தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில், வந்த ரயிலில் மோதியது. மாலகாவிலிருந்து புறப்பட்ட ரயில்  சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின் (GMT 18:45 மணிக்கு) விபத்தைச் சந்தித்துள்ளதாகத் தெரிய வருகிறது.

எதிர் தண்டவாளத்தில், மாட்ரிடில் இருந்து ஹுல்வாவுக்கு தெற்கே பயணித்த இரண்டாவது ரயிலுடன் மோதிய இந்தச் சம்பவத்தில், முன் பெட்டிகளில் இருந்தவர்கள் கொல்லப்பட்டும், பலர்  காயமடைந்துமுள்ளனர்.

ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் புவென்ட் கூறுகையில், இந்த விபத்து தண்டவாளத்தின் நேரான பகுதியில் நடந்திருப்பது, மிகவும் விசித்திரமானது என்று கூறினார். இந்த விபத்து மிக மிக மோசமானது. இது ஒரு பேரழிவு," என்று அவர் மேலும் குறிப்பிட்டார். 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula