free website hit counter

அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிராக செலுத்தப்படும் தடுப்பூசிகளில் இப்போது ஃபைசர் தடுப்பூசிகளுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (எஃப்.டி.ஏ) முழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

நியூசிலாந்தில் ஏற்கனவே அமுல் படுத்தப் பட்ட நாடு தழுவிய லாக்டவுனானது குறைந்தது வெள்ளிக்கிழமை வரை நீடிக்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

நைஜீரியாவில் சமீபத்தில் தாம் கடத்திய 121 மாணவர்களில் 15 பேரை பெற்றோரிடம் பணயத் தொகை பெற்றுக் கொண்டு விடுவித்துள்ளனர் அங்கிருக்கும் தீவிரவாதிகளில் சிலர்.

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலைக் கைப்பற்றி தலிபான்கள் ஆட்சிக்கு வந்து 1 வாரத்துக்கும் அதிகமாகி உள்ள நிலையில் தமது தேசத்தை விட்டு வெளியேற காபூல் விமான நிலையத்திற்கு இன்னமும் பல ஆயிரக் கணக்கான ஆப்கானியர்களும், வெளிநாட்டவரும் முற்றுகையிட்டு வருகின்றனர்.

அத்திலாந்திக் கடலில் அகதிகளுடன் ஸ்பெயின் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த படகு சில தினங்களுக்கு முன் விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த 52 பேர் மாயமாகியுள்ளனர்.

ஆப்கானின் ஹீரத் பகுதியைச் சேர்ந்த தலைமை போலிஸ் அதிகாரியான ஹஜி முல்லா அச்சாக்‌ஷாய் என்பவரை தலிபான்கள் கண்ணைக் கட்டி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றது.

சனிக்கிழமை மலேசியாவின் புதிய (9 ஆவது) பிரதமராக 61 வயதாகும் இஸ்மாயில் சப்ரி யாகோப் பதவியேற்றுள்ளார்.

மற்ற கட்டுரைகள் …