free website hit counter

தர்மசாஸ்தாவாகிய ஐயப்பன் !

செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தரணியில் தர்மத்தை நிலை நாட்டும் ஒருவனது செயல், இப்பூலகைப் பாதுகாப்பதுடன் மட்டுமன்றி, அவனையும் தெய்வீகமானவனாக மாற்றுகிறது.

அவனாற்றிய தர்மம், தெய்வீகத்தின் பிரதிநிதியாக அவனை மாற்றுகிறது. தர்மத்தை நிலைநாட்டுவதற்காக மணிகண்டனாக அவதரித்த ஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பதன் காரணம் இதுவேயாகும். ஐயப்பனது நாமங்களில் தர்மசாஸ்தா என்பது விஷேடமானது, பவித்திரமானது.

சாஸ்தா என்ற வார்த்தைக்கு சிறந்த ஆளுமையுள்ளவர் அல்லது கட்டளை இடுபவர், தவறு செய்பவரை தண்டிப்பவர் எனப் பொருள் கொள்ளலாம். இந்தவகையிலேயே முருகனுக்கு பிரம்ம சாஸ்தா என்றும், . வீரபத்திரருக்கு தக்ஷ சாஸ்தா என்றும் சொல்லப்படும் ஐதீகம் உள்ளது. மகிஷி சம்ஹாரத்தின் நிமித்தமாக மணிகண்டனாக அவதரித்து, தர்மத்தை நிலை நாட்டிய ஆளுமையான தர்மசாஸ்தா ஐயப்பனின் எட்டாவது திருவடிவாகப் போற்றப்படுகின்றார்.

மனித வாழ்க்கையில் தர்மம் என்பது ஆணிவேர்போன்றது. ஒரு மனிதன் அறவழியில் நடப்பதற்கான தர்மம் எதுவெனில் உண்மையாக இருப்பது. எங்கு தர்மம் அழிகிறதோ, அங்கு தர்மத்தை நிலை நாட்ட நான் வருவேன் எனக் கீதையில் கிருஷ்ணன் கூறுவதன் பொருள் உண்மையின் விளக்கமே.

சபரிமலையில் தர்மசாஸ்தாவாக யோக நிலையில் அமர்ந்திருக்கும் ஐயப்பன் சாஸ்திரங்களை உபதேசித்து வாழ்பவர். சபரிமலை ஐயப்பன் சன்னதியில் 18 படிகளும் 18 தர்ம தத்துவ நூல்களை குறிக்கின்றன. இந்தத் தத்துவப் படிகளை ஏறி மேலே வரும் ஆன்மாக்களுக்கு 'தத்துவமஸி' என யோகநிலை உணர்த்தி அருள்பாலிக்கும் வண்ணமாய் அமர்ந்திருக்கும் ஐயப்பன் அடியவர்கள் மனதில் வாழும் தெய்வம் என்பதாலேயே "சாஸ்தா வஸதி மானசே" எனப் பாடித்துதிக்கின்றோம்.

தேஜோ மண்டல மத்யகம் த்ரிநயனம்
திவ்யாம் பரலாங்க்ருதம்
தேவம் புஷ்ப சரேஷு கார்முக விலஸத்
மாணிக்க பாத்ராபயம்
பிப்ராணம் கரபங்கஜை: மதகஜ
சகந்தாதி ரூடம்விபும்
சாஸ்தாரம் சரணம் பஜாமி ஸததம்
த்ரைலோக்ய சம்மோஹனம்|

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction