எட்டுத்தோட்டாக்கள், ஜீவி, கேர் ஆஃப் காதல் போன்ற படங்களில் நடித்த நடிகர் வெற்றியின் நான்காவது படம் ‘மெமரீஸ்’. அந்தப் படத்தின் டீசரை இசையமைப்பாளர் டி. இமான் மற்றும் நடிகர் ரகுமான் ஆகியோர் வெளியிட்டனர்.
இப்படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் காதல் படமாக இருக்கும் என்கிறார் இயக்குநர். ஆனால் டீசர்.. கதாநாயகனின் நினைவுகளைத் திருடி விளையாடும் ஒரு மாபியாவின் கதை என்பதைக் கூறுகிறது. டீசரைப் பார்த்த நெட்டிசன்கள் ‘கிறிஸ்டோபர் நோலனை அவமானப்படுத்தாமல் இருந்தால் சரி’ என்று எதிர்வினை புரிந்துள்ளனர்.
இந்தவகைக் கதை தமிழ் சினிமாவில் முதன் முதலில் மறுஜென்மக் கதைகளில் எடுத்தாளப்பட்டன. ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் பூர்வ ஜென்ம நினைவுகள் மீள்வதாக கதையமைப்பு அமைக்கப்பட்டது. அதன்பிறகு பல படங்கள் எடுக்கப்பட்டாலும் மிகவும் தரம் முறைவான முறையில் ஆயிரம் ஜென்மங்கள், நீயா உள்ளிட்ட பேய் படங்களிலும் நினைவுகள் மீளும் கதைக்கரு எடுத்தாளப்பட்டது. இயக்குநர் சி.வி.குமார் எழுதிய இயக்கிய மாயவன் படத்தில் மூளையையும் அதன் நினைவுகளையும் மொத்தமாகத் திருடும் அறிவியல் மாபியா கதை அமைக்கப்பட்டதும் நினைவிருக்கலாம். மெமரீஸ் படம் இதில் எந்த வகை என்பதை படம் வெளியான பிறகுதானே தெரியவரும். இப்போதைக்கு வரவேற்பைப் பெற்றுவரும் அதன் டீசரைப் பாருங்கள்:
																						
     
     
    