ஏ.எல். விஜய் இயக்கத்தில் பேபி சாரா
ஏ.எல். விஜய் இயக்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தெய்வத்திருமகள். இப்படத்தில் விக்ரமின் மகளாக பேபி சாரா நடித்திருந்தார்.
இவர் ஏற்று நடித்த நிலா கதாபாத்திரத்தை இன்று வரை யாராலும் மறக்கவே முடியாது. அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதன்பின் சைவம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பேபி சாரா, பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் இளம் வயது பெண்ணாக நடித்து ரசிகர்கள் மனதில் இடத்தை பிடித்துவிட்டார்.
இந்நிலையில், அடுத்ததாக தமிழில் கதாநாயகியாக நடிகைசாரா என்டரி கொடுக்க போகிறாராம். இவரை குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்த இயக்குனர் விஜய் தான் கதாநாயகியாகவும் இவரை அறிமுகம் செய்ய போகிறாராம்.
இதுகுறித்து இயக்குனர் விஜய் பேசுகையில் "பொன்னியின் செல்வன் 2 படத்தில் மணிரத்னம் சாராவை தெய்வீக அழகுடன் சித்தரித்து காட்டிவிட்டார். இனி சாரா தைரியமாக ஹீரோயினாக நடிக்கலாம். அவரை நான் 2025ஆம் ஆண்டு தமிழில் கதாநாயகியாக அறிமுகப்படுத்த இருக்கிறேன்" என கூறியுள்ளார்.