free website hit counter

ஒரு அழகான பயிற்சி - புதிய வாய்பு !

உள்ளொளி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நன்றி உணர்வு என்பது, ஆன்மீகத்தையும் மனநலத்தையும் இணைக்கும் ஒரு அழகான பாலம். வாழ்க்கையில் இதனை ஒரு பயிற்சியாகப் பழகிக் கொள்வதை Gratitude Practice என்கிறார்கள்.

நம் வாழ்க்கையில் உள்ள நல்ல விஷயங்கள், மனிதர்கள், அனுபவங்கள் ஆகியவற்றிற்காக தினமும் மனதார நன்றி கூறும் பழக்கம் நமக்குப்  புதிய கருத்து அல்ல. நம்முன்னோர்கள் இதை ஏற்கனவே வாழ்வில் நடைமுறைப்படுத்தியவர்கள். அவர்கள் இறைவழிபாட்டின் மூலம் “நன்றி” உணர்வை தினசரி வாழ்க்கையுடன் இணைத்தனர்.

காலை, மாலை வழிபாடு செய்வது, உணவுக்கு முன் இறைவனை நினைத்து நன்றி கூறுவது, அறுவடைப் பண்டிகைகள் கொண்டாடுவது போன்ற அனைத்தும் இந்த ஒழுங்கின் தொடரே. “எனக்குக் கிடைத்ததெல்லாம் இறை அருள்” என்ற நன்றி மனப்பான்மையை வெளிப்படுத்தும் வழிகள்.

திருக்குறள் கூட நன்றியுணர்வின் மகத்துவத்தை வலியுறுத்துகிறது. அதில் நன்றி மறவாமை ஒரு உயர்ந்த பண்பாகக் கூறப்படுகிறது. அதாவது, இன்று நாம் “Gratitude Practice” என்று சொல்லுவது நம்முன்னோர்கள் இறைநம்பிக்கை, பணிவு, நன்றியுணர்வு ஆகியவற்றுடன் இணைத்து வாழ்ந்த வாழ்க்கை முறையே ஆகும்.

இன்றைய இளையவர்கள் பலர் மிகக் கடுமையான மன அழுத்தங்களுக்கு உள்ளாவதன் அடிப்படைகளில் Gratitude Practice அற்றுப் போனது அல்லது உளமார்ந்த செய்கையாக இல்லாது போனது ஒரு காரணமாக இருக்கலாம்.  இந்த நிலைக்கு ஒரு மாற்றீடாக, இசையோடும், இயற்கை யோடும், இணைந்த மிகச் சுலபமான ஒரு Gratitude Practice ஐ இணைய வழியில் உருவாக்கியுள்ளோம். 

ஒவ்வொருநாளும் காலையில் ஒரு புதிய இசையுடனும், சுயமுன்னேற்றம் தரும் கவி வரிகளுடனும், இயற்கையின் வனப்பு மிகு காட்சியுடனும்,  'உள்ளொளி' (Rise in Peace) எனும் தலைப்பில், எங்கள் வலைக்காட்சிப் பகுதியில்,சில நொடிக் காட்சிகளாக உருவாக்கித் தருகின்றோம். தினமும் காலையில் உங்கள் பணிகளைத் தொடங்குமுன், இதனைப் பார்த்துக் கேட்டு லயித்து, இயற்கைக்கு நன்றி சொல்லி உங்கள் புதிய நாளைத் தொடங்குங்கள். நல்லதே நடக்கும்...

மறக்காமல் நீங்கள் கேட்கும் பாடலை 

" தினமும் உலகைப் புதிதாய் காணலாம் "

- 4தமிழ்மீடியா.

https://youtube.com/shorts/pBAILPOdR9U

புதிய வாய்ப்பு

காலை ஒரு புதிய வாய்ப்பு
கனவுகள் காத்திருக்கும் பாதை
நன்றி கொண்டு முதல் அடியில்
நம்பிக்கை வந்து சேரும் கையில்

காலை ஒரு நிமிடம் அமைதியுடன் தொடங்கினால்
நாள் முழுவதும் மனம் இலகுவாக இருக்கும். 🌅

இந்த சிறிய தமிழ் பாடல்
நன்றி உணர்வு மற்றும் மன அமைதியை நினைவூட்டுகிறது.

1 நிமிடம் அமைதி
ஒரு நன்றி உணர்வு
ஒரு நல்ல எண்ணம்

அதுவே ஒரு நல்ல நாளின் ஆரம்பம்.

🌿 உள்ளொளி | Rise in Peace

https://youtube.com/shorts/pBAILPOdR9U இணைப்பினில் அழுத்திக் காணுங்கள், கேளுங்கள்.

#TamilMotivation
#MorningPeace
#GratitudeTamil
#PositiveEnergy
#RiseInPeace

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: