free website hit counter

இத்தாலி கொரோனா தொற்றின் பேரிழப்புக்குப் பின் பெற்ற பெரும் வெற்றி " யூரோ -2020 " !

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இத்தாலிய அணி கோல் கீப்பரின் வெற்றிகரமான தடுப்பில், 3: 2 ( 4-3 ) எனும் பெனால்டிக் கோல்களில் இத்தாலிய அணி, " யூரோ - 2020 " வெற்றிக் கோப்பையை வெம்பிளி அரங்கிலிருந்து சுவீகரித்துக் கொண்டது.

'யூரோ- 2020' கோப்பைக்கான இறுதிப் போட்டி இலண்டன் வெம்பிளி மைதானத்தில் ஐரோப்பிய நேரம் இரவு 9.00 மணிக்கு ஆரம்பமாகியது. விறுவிறுப்பாகத் தொடங்கிய ஆட்டத்தில், இந்தப் போட்டித் தொடரின், காலிறுதிப் போட்டியில் உக்ரைனையும், அரையிறுதிப் போட்டியில் டென்மார்க்கையும் வெற்றிகொண்டு, யூரோ கோப்பை வரலாற்றில் முதல் முறையாக, 55 ஆண்டுகளின் பின்னதாக இறுதிப் போட்டி ஒன்றில் கலந்து கொள்ளும் உற்சாகத்துடன் களமாடிய இங்கிலாந்து அணி, ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே முதலாவது .கோலை அடித்து, ஆட்டத்தை மேலும் விறுவிறுப்பாக்கியது. 25 வயதான, (Luke Shaw) லுக் சாவ் அபாராமான முறையில் அந்த முதலாவது கோலை உள் விழுத்தியிருந்தார்.

ஆடுகளத்தில், இங்கிலாந்து அணியை விடவும், உதைப்பந்தாட்டத்திற்கான சரியான நிலைகளில் நின்றே இத்தாலிய அணி ஆடியது. ஆனாலும் அதனை முறியடித்து பந்தினை தம் வசமாக்க வைத்திருப்பதில் இங்கிலாந்து அணி அபாரமாக ஆடியது. முதற்பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை விட இரட்டிப்பு அதிகமாக பந்துக் கடத்தல்களை இத்தாலி செய்திருந்த போதும், அதனைக் கச்சிதமாக அரண் செய்தது இங்கிலாந்து.

இடைவேளையின் பின்னதான ஆட்டத்தில், இரு அணிகளும் விறுவிறுப்பாக ஆடத் தொடக்கின. 67 வது நிமிடத்தில் இத்தாலிய அணியின் வீரர், ( Leonardo Bonucci ) லெனார்டோ பொனூச்சி, இத்தாலியின் முதலாவது கோலை அடித்துச் சமன் செய்தார். அதன் பின்னதாக மூன்றுக்கும் அதிகமான வெற்றிப் பந்து வாய்ப்புக்களை இத்தாலிய அணி தவறவிட்டிருந்தது.

இங்கிலாந்து அணியின் தடுப்பாட்டம் சிறப்பாக இருந்தது. 90 நிமிடங்கள் நிறைவுக்கு வருவதற்குச் சமீபமாக, இத்தாலிய அணியின் கப்டனுக்கு மஞ்சள் அட்டை கிடைத்தது. 97 நிமிடத்தில் போட்டி சமநிலையில் நிறைவு பெற மேலதிக நேரம் வழங்கப்பட்டது. மேலதிக நேரத்திலும் எந்தக் கோல்களும் அடிக்கப்படாமையால் பெனால்டி முறைத் தேர்வுக்குப் போனது. அதிலும் இறுதி நேரம் வரை கடுமையாகவே இருந்தது.

இத்தாலிய அணி ஆட்டம் முழுவதும் சிறப்பான பந்துக் கடத்தல்களைச் செய்த போதும், இங்கிலாந்து அணி அவற்றைக் கச்சிதமாக முறியடித்து ஆடியது. ஆயினும் மேலதிக நேரம் முடிவடைந்து பெனால்டிக்கு வந்தபோது, இத்தாலிய அணியின் பக்கம் வெற்றி வாய்ப்பு சாய்ந்தது. இத்தாலிய அணி கோல் கீப்பரின் வெற்றிகரமான தடுப்பில், 3: 2 ( 4-3 ) எனும் பெனால்டிக் கோல்களில் இத்தாலிய அணி, " யூரோ - 2020 " வெற்றிக் கோப்பையை வெம்பிளி அரங்கிலிருந்து சுவீகரித்துக் கொண்டது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction