free website hit counter

சுவிற்சர்லாந்திற்கான புதிய வரலாற்றினை இன்றிரவு நாங்கள் உருவாக்கினோம் : ஷாகா

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"சுவிற்சர்லாந்திற்கான புதிய வரலாறு ஒன்றினை நாங்கள் இன்றிரவு உருவாக்கினோம்," என சுவிற்சர்லாந்து தேசிய கால்பந்து அணியின் தலைவன் கிரானிட் ஷாகா கூறினார்.

ருமேனியா புக்கரெஸ்டில், தேசிய அரங்கில் நேற்றிரவு நிகழ்ந்த, "ஈரோ - 2020 " கோப்பைக்கான போட்டிகளின் 16வது சுற்றில், பிரான்சினை எதிர்கொண்டு, 5-4 என வெற்றி பெற்ற மகிழ்ச்சிப் பிரவாகத்துடன் அவர் இதனைக் கூறினார்.

1954 ஆம் ஆண்டில் உலகக் கோப்பையை நடத்தியதில் இருந்து சுவிஸ் எந்வொரு ஒரு முக்கிய போட்டியிலும் காலிறுதிக்கு முன்னேறவில்லை. அந்த வரலாறு இந்தப் போட்டியின் போது மாற்றி எழுதப்பட்டிருக்கிறது. காற்பந்துப் போட்டியில் உலகச் சாம்பியனான பிரான்சினை வெற்றி கொண்டது என்பது, உண்மையில் ஒரு அபூர்வமான, அபாரமான வெற்றிதான். இந்த வெற்றியின் மூலம் வரும் வெள்ளிக்கிழமை செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெறும் காலிறுதிப் போட்டியில் சுவிஸ் அணி ஸ்பெயினுடன் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றுள்ளது.

ஆட்டம் நேரம் முழுவதிலும் இரு அணிகளும் 3-3 எனும் புள்ளியில் சமநிலை கண்டபோது, கிடைத்த மேலதிகமான பெனால்டி முறைக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. "ஈரோ - 2020" க்கான சுற்றுப் போட்டியில் வழங்கப்பட்ட முதலாவது பெனால்டி வாய்ப்பு நிலையும் இதுவாகும். இதனை மிகச் சரியாகப் பயன்படுத்தி, உலகக் கோப்பை சாம்பியனான பிரான்சுக்கு எதிராக சுவிஸுக்கு 5-4 பெனால்டி ஷூட்அவுட் வெற்றிகளைப் பெற்று, 67 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு பெரிய கால்பந்து போட்டியின் காலிறுதியில் விளையாடும் வாய்ப்பினையும் பெற்றுக் கொண்டது.

இறுதி பெனால்டியைக் காப்பாற்ற தனது வலதுபுறத்தில் டைவ் செய்து 10 வது பெனால்டியினைத் தீர்க்கமாமாகக் கைப்பற்றிய சோமர், "இது என் கால்பந்து மாலை," எனக் கூறினார். "இறுதியாக 16 சுற்றுக்குச் செல்ல இது எங்களுக்கு கிடைத்த வாய்ப்பாகும், ஏனென்றால் நாங்கள் இதற்கு முன் இதை ஒருபோதும் செய்யவில்லை. இது நம்பமுடியாதது. நாங்கள் மிகுந்த நேசிப்புடன் விளையாடினோம். இந்த வெற்றி மகிழ்ச்சியும் ஆச்சரியமும் தருகிறது. நாங்கள் இன்றிரவு வரலாற்றை உருவாக்கினோம். அனைவரும் மிகவும் பெருமைப்படுகிறோம்."கிரானிட் ஷாகா கூறினார்

சுவிஸ் அணியிடம் தோல்வி கண்டிருக்கும் பிரெஞ்சு காற்பந்து அணி ஒரு வலுவான அணி. 1998 இல் உலகக் கோப்பையை யும், தொடர்ந்து யூரோ 2000 கோப்பையையும் வெற்றி கொண்டிருந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, யூரோ 2016 இறுதிப் போட்டியில் பிரான்ஸ் தோற்ற போதும், 2018ல் உலகக் கோப்பையை வென்றிருந்தது.

பிரான்ஸ் பயிற்சியாளர் டிடியர் டெஷ்சாம்ப்ஸ் கூறுகையில், "இது வலிக்கிறது, ஆனால் நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அணியில் எல்லோரும் உண்மையில் ஏமாற்றமடைகிறார்கள். லாக்கர் அறையில் எல்லோரும் சோகமாக இருக்கிறார்கள். ஆனால் இந்த கடினமான தருணத்தில் முழு அணியும் இன்னும் ஒன்றுபட்டுள்ளது. ” எனக் குறிப்பிட்டார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction