free website hit counter

இத்தாலி 'யூரோ2020' இறுதிச் சுற்றுக்குத் தேர்வானது !

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

' யூரோ -2020 ' கோப்பைக்கான காற்பந்தாட்டப் போட்டிகளின் அரையிறுதி ஆட்டங்களின் முதலாவது போட்டி, இன்றிரவு இலண்டன் வெம்பிளி மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியில் இத்தாலி, ஸ்பெயின் அணிகள் விளையாடின. இரு அணிகளுமே திறமையானதும் பலமான அணிகளுமாகும். ஆரம்பம் முதலே இரு அணிகளும் திறமையாக விளையாடின. ஆடுகளத்தில் பந்தினைப் பெரும்பாலான நேரங்களில், தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஸ்பெயின் அணி, ஆட்டப் புள்ளி விபரத்திலும், இத்தாலியை விட அதிகமாகவே இருந்தது. பொருத்தமான இடங்களுக்கு பந்தினை நகர்த்தியதிலும், வெற்றிக் கோல்களை போடும் முயற்சியிலும், இத்தாலியைவிட ஸ்பானிய அணி முன்னிலையிலேயே இருந்தது. ஆயினும் ஆட்டத்தின் அரையிறுதிவரை இரு அணிகளுமே எந்தவொரு பொல்களையும் அடிக்கவில்லை.

ஆட்டத்தின் அரையிறுதி இடைவேளையின் பின் களமிறங்கிய அணிகளில், இத்தாலிய அணியின் முன் களவீரர், பெட்ரிக்கோ கியேசா 60 நிமிடத்தில் முதலாவது கோலினை அடித்தார். விறுவிறுப்பாகத் தொடர்ந்த ஆட்டத்தின் 80 வது நிமிடத்தில், ஸ்பானிய அணியின் வீரர், ஆழ்வரோ மொறாத்தா நுட்பமான ஒரு கோலினை அடித்து, ஆட்டத்தினைச் சமன் செய்தார். அதன் பின்னதாக 90 நிமிடங்களின் நிறைவில், இரு அணிகளும் சமநிலையில் இருந்தமையால், மேலதிக நேரம் வழங்கப்பெற்றது.

மேலதிக நேர ஆட்டத்தின் போதும் இரு அணிகளும் தமது பலத்தை சிறப்பாகவே வெளிப்படுத்தி விளையாடின. ஸ்பெயின் அணிவீரர்கள் பந்தினை முன்னகர்த்தி சென்ற போதும், இத்தாலி அணிவீரர்கள் பலமாகத் தடுத்தாடினர். அதேபோல் ஸ்பெயின் அணிக்குக் கிடைத்த ஒரு பெனால்டி வாய்ப்பும் தவறியது. சுவாரஸ்மான ஆட்டத்தின் மேலதிக நேரத்தில் இரு அணிகளும் கோல்களும் அடிக்காத சம நிலையில் பெனால்டி வாய்ப்புக்குச் சென்றது.

பெனால்டி நேரத்திலும் கடுமையான போட்டியைக்காட்டின இரு அணிகளும். ஆனால் இறுதி இரு கோல்களில் நிகழ்ந்த அதிசயத்தால், 4: 2 என்ற வெற்றிப் புள்ளியுடன் இத்தாலி அணி இறுதிச்சுற்றுக்குத் தேர்வானது. "ஸ்பானியா விளையாடியது, இத்தாலி வெற்றிபெற்றது" என விளையாட்டு விமர்சர்கர்கள் கூறினார்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction