free website hit counter

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு Z பிரிவு பாதுகாப்பு

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு(Z category security) வழங்கப்பட உள்ளது. இதுவரை கங்குலிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு(Y category security) அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு வழங்கப்பட்டு வந்த ஒய் பிரிவு பாதுகாப்புக்கான கால அவகாசம் முடிவுக்கு வந்த நிலையில், கங்குலிக்கான பாதுகாப்பை இசட் பிரிவுக்கு உயர்த்த மேற்கு வங்காள அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில மூத்த அதிகாரி தெரிவித்தார். இசட் பிரிவு பாதுகாப்பின் படி சவுரவ் கங்குலிக்கு 8 முதல் 10 போலீசார் பாதுகாப்பு அளிப்பார்கள்.

சவுரவ் கங்குலி தற்போது டெல்லி அணியின் ஆலோசகராக இருந்து வருகிறார். வரும் 21-ம் தேதி கங்குலி கொல்கத்தா வருகை தருகிறார். அதன்பிறகு அவருக்கு தினமும் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: