தனுஷ்க குணதிலக்க மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இன்று சிட்னி நீதிமன்றத்தில் 3 குற்றச்சாட்டுகளை அரசு வழக்கறிஞர் வாபஸ் பெற்றார். வழக்கு ஜூலை 13ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு இடம்பெற்ற இருபதுக்கு - 20 உலகக் கிண்ண தொடர் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றிருந்த போது தனுஷ்க குணதிலக்க விளையாடிய முதல் போட்டியில் அவருக்கு உபாதை ஏற்பட்டதால் அவர் தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், சமூகவலைத்தளம் ஊடாக அறிமுகமான பெண்ணொருவரை சந்தித்து, சிட்னியின் கிழக்குப் புறநகரில் உள்ள பெண்ணின் வீட்டிற்கு தனுஷ்க குணதிலக்க சென்றுள்ளார்.
இந்நிலையில், தனது அனுமதி இல்லாமல் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என குறித்த பெண் தனுஷ்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார்.
இதையடுத்து தனுஷ்க குணதிலக்க கடந்த 2022 ஆம் அண்டு நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.