free website hit counter

மீண்டும் 2.5 பில்லியன் டொலர் கடனுதவி வழங்கும் சீனா !

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இலங்கை தவிர்க்க முடியாமல் 2.5 பில்லியன் டொலர் சீனக் கடனைப் பெறும்
சீனா இலங்கைக்கு இரண்டரை பில்லியன் டொலர் கடனை வழங்கும் என பீஜிங்கிற்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி பாலித கொஹொன நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதற்கான உறுதிப்படுத்தல்களை சீன அதிகாரிகள் வழங்கியுள்ளதாக தூதுவர் தெரிவித்தார்.

இந்த ஏற்பாடுகளில் $1 பில்லியன் கடன் மற்றும் $1.5 பில்லியன் கடன் வசதி ஆகியவை அடங்கும்.

இந்தப் பணம் எதிர்வரும் ஜூலை மாதம் செலுத்த வேண்டிய கடனைச் செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும் என பீஜிங்கிற்கான இலங்கைத் தூதுவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction