free website hit counter

10 வருடங்களின் பின்னர் நேரடி விமான சேவை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பத்து வருடங்களுக்குப் பின்னர் நேரடி விமான சேவை.
துருக்கிய விமான சேவை பத்து வருடங்களின் பின்னர் இலங்கைக்கான நேரடி விமான சேவையை இன்று திங்கட்கிழமை (30) ஆரம்பித்துள்ளதாக இலங்கை விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்துச் சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இஸ்தான்புல்லுக்கும் கொழும்புக்கும் இடையில் வாராம் தோறும் 4 விமான சேவைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் காலை 5.41 மணிக்கு 261 பயணிகளுடன் முதலாவது நேரடி விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. முதலாவது நேரடி விமானம் நீர் வணக்கத்துடன் வரவேற்கப்பட்டது. இலங்கை தேயிலை சபையின் அனுசரணையுடன் உலகின் தலைசிறந்த தேயிலைக்கு இணையான சிலோன் தேநீர் பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன.

இந்த நேரடி விமானச் செயற்பாடுகளின் ஆரம்பமானது எதிர்காலத்தில் இலங்கையின் சுற்றுலாத் துறையை பாரியளவில் மேம்படுத்தும் எனவும், துருக்கி விமான சேவைகளுடன் ஐரோப்பிய இடங்களை இணைக்க இந்த இணைப்பு முக்கியமானது எனவும் விமான நிலையம் மற்றும் விமான நிலைய தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி விமான நிலையத்தில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் தெரிவித்தார். இஸ்தான்புல், துருக்கி மற்றும் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இடையே நேரடி விமான சேவைகள் 08 மணிநேரம் எடுக்கும் மற்றும் ஒவ்வொரு வாரமும் திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில், இந்த விமானங்கள் துருக்கியிலிருந்து காலை 05.40 மணிக்கு வந்து காலை 07.40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் 2024ஆம் ஆண்டு முதல் இந்த துருக்கி விமான சேவைகள் வாரத்தின் 7 நாட்களுக்கு ஒருமுறை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction