free website hit counter

Sidebar

13
செ, மே
41 New Articles

சுவிற்சர்லாந்தில் பெரு மழை - காட்டாறு வெள்ளம் - A13  வேகவீதி  துண்டாடப்பட்டது !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுவிற்சர்லாந்தில் கடந்த சில தினங்கள் பெய்து வரும் பெருமழைகாரணமாக, பல இடங்களிலும் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.

 குறிப்பாக சுவிற்சர்லாந்தின் தென்பகுதியிலும், வலே பகுதியிலுள்ள செமாற் பகுதியிலும், ஏற்பட்ட காட்டாற்று பெருவெள்ளம், பல வீடுகளையும், வீதிகளையும் அடித்துச் சென்றுள்ளது.

திச்சினோ கிறபுண்டன் மாநிலங்களூடாகச் செல்லும் ஏ13 வேகவீதி,  லொஸ்தாலோ பகுதியில் முற்றாகத் துண்டாடப்பட்டுள்ளது. உள்ளூர் சாலைகளும் சேதத்துக்குள்ளாகியுள்ளன. வெள்ளம் வடிந்தபின் உடனடியாகத் திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பெற்றாலும்  இப்பெருந்தெருப்பாதையூடான பயணங்கள் மீளவும் தொடங்குவது தாமதமாகலாம் என்பதனால் மாற்றுவழிப் பயணங்கள் குறித்து, காவல்துறையினர்  ஆராய்ந்து வருகிறார்கள். 

இப்பகுதியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் பின் காணமற்போன மூவரைத் தேடும் பணிகள் தீவிரமாகப்பட்டுள்ளன. மோப்ப நாய்கள், ட்ரோன் மற்றும் ஹெலிகொப்டர் உதவியுடன் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula